"பாரதியார் வழியில் பத்திரிக்கை நடத்தியவர் சி.பா.ஆதித்தனார்" - மூத்த பத்திரிகையாளர் மாலன்
பாரதியார் வழியில் பத்திரிக்கை நடத்தியவர் சி.பா.ஆதித்தனார் என்றும் பெரியார் இன்னொருவரை பெரியார் என்று சொன்னார் என்றால் அது சி.பா.ஆதித்தனார் தான் என எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான மாலன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் ஐயா தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் எந்த வட்டாரத்தில் பத்திரிகை அச்சிடப்படுகிறதோ? அந்த வட்டாரங்களில் மக்கள் பேசுவதை போல் எழுத வேண்டும் என்று கூறியவர் சி.பா.ஆதித்தனார் என்றும் அவர் கூறினார்.