Sivakasi College Student | காலேஜ் சென்று வீட்டிற்கு பிணமாக வந்த மகன் - நெஞ்சை உலுக்கும் தாயின் கதறல்

Update: 2025-07-03 05:02 GMT

சிவகாசியில், தனியார் பேருந்து படியில் தொங்கியபடி பயணித்த கல்லூரி மாணவன் தவறி விழுந்து உயிரிழந்தார்.

சுப்ரமணியபுரம் காலனியை சேர்ந்த 18 வயது ஆல்பர்ட் என்ற மாணவர், சாத்தூரிலுள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி முடிந்து வீடு திரும்பும் போது கூட்ட நெரிசலாக காணப்பட்ட தனியார் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்துள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த ஆல்பர்ட்டின் தலை மீது பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சிவகாசி போலீசார், ஓட்டுனர் மோகன்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞரின் உடலை கண்டு அவரது தாயார் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்