Aruppukottai Murder | தந்தையை கத்தியால் குத்த வந்த நபரை கொலை செய்த மகன்.. அதிர்ச்சி சம்பவம்

Update: 2025-06-25 02:48 GMT

மது போதையில் தந்தையை கத்தியால் குத்த வந்த நபரின் கத்தியை பிடிங்கி மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருப்புக்கோட்டை அருகே வெள்ளக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் நாகராஜ், இவரது மகன் விக்னேஷ். இந்நிலையில் நாகராஜன் தனது நண்பரான முத்துக்குமார் என்பவருடன் சேர்ந்து வீட்டில் மது அருந்திய போது இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு முத்துகுமார் நாகராஜனை கத்தியல் குத்த முயன்றுள்ளார். இதனையடுத்து சத்தம் கேட்டு வந்த விக்னேஷ் முத்துகுமார் கத்தியை பிடிங்கி அவரை கழுத்தில் குத்தியதில் முத்துகுமார் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். இந்த சம்வம் குறித்து அறிந்த போலீசார் விக்னேஷை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்