சென்னையில் ஓடும் ஆம்னி பேருந்துக்குள் பாம்பு - அலறி இறங்கி ஓடிய பயணிகள்

Update: 2025-05-28 07:05 GMT

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்தில் திடீரென பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராமேஸ்வரத்தில் இருந்து 40 பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த நிலையில், சென்னை OMR சாலை பெருங்குடி அருகே சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் கால் அடியில் பாம்பு தட்டுப்பட்டுள்ளது. உடனே ஓட்டுநர் பேருந்தை பெருங்குடி பழைய சுங்கச்சாவடி அருகே சாலையோரத்தில் நிறுத்தியுள்ளார். பயணிகள் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கிய நிலையில், தகவல் அறிந்து வந்த துரைப்பாக்கம் தீயணைப்பு துறை வீரர்கள் சுமார் 30 நிமிடங்கள் போராடி கொம்பேரி மூக்கன் பாம்பை மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்