Smuggling || Rationrice || ரேஷன் அரிசி கடத்திய கும்பலை 15 கி.மீ சேசிங் செய்த பெண் அதிகாரி

Update: 2025-06-13 07:54 GMT

கன்னியாகுமரி வழியாக கேரளாவுக்கு சொகுசு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திய கும்பலை, கொட்டும் மழையில் பெண் அதிகாரி ஒருவர் காரில் சேசிங் செய்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

கன்னியாகுமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு தனி வட்டாட்சியர் பாரதி என்ற பெண் அதிகாரி, மார்த்தாண்டம் பகுதியில் இருந்து, பைக்கில் எஸ்கார்ட் துணையோடு ரேஷன் அரிசி கடத்திய சொகுசு வாகனத்தை, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், பின்னால் விரட்டி சேசிங் செய்துள்ளார். சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு துரத்திச் சென்று, தமிழக-கேரள எல்லையான புலியூர் சாலை வரை சென்றும், காரை தடுக்க முடியவில்லை. சினிமா காட்சிகளை போன்று, கடத்தல் வாகனத்தை சேசிங் செய்து பிடிக்க முயன்ற வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்