Sivanthi Adithanar | சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் - தலைவர்கள் மரியாதை
சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் - தலைவர்கள் மரியாதை
பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 90-ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். பத்திரிகை உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் 90-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது நினைவிடத்தில் சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர் மனோ தங்கராஜ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார். பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் ஆகியோர் சிவந்தி ஆதித்தனாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி, காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், பாமக எம்எல்ஏ அருள் ஆகியோர் டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல தொழில் அதிபர் வி.ஜி.சந்தோஷம், பாஜக துணைத் தலைவர் ராம.சீனிவாசன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாரயணன், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் பொருளாளர் ரூபி.மனோகரன், நெல்லை எம்.பி. ராபர்ட் புரூஸ், திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம், நடிகரும் தேமுதிக பிரமுகருமான மீசை ராஜேந்திரன் ஆகியோர் சிவந்தி ஆதித்தனாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். நாடார் மகாஜன சங்கம் சார்பில் கரிக்கோல் ராஜ், தேமுதிக முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.