Sivagangai-யில் அதிரவிட்ட கிராம மக்கள்.. ஓட்டம் பிடித்த பெண் Police-கள்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே போக்சோ வழக்கில் சிறுமிகளை விசாரணைக்கு அழைத்து செல்ல கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெண் காவலர்கள் ஓட்டம் பிடித்தனர். பள்ளி மாணவிகளை சிலர் பாலியல் சீண்டல் செய்ததாக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில், 8 பேரை போலீசார் கைது செய்தனர். , சிறுமிகளை விசாரணைக்காக அழைத்துச் செல்ல பெண் காவலர்கள் கிராமத்திற்கு சென்றனர். அப்போது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காவலர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.