தந்தையின் இறுதி சடங்கில் மகள் செய்த அதிர்ச்சி செயல்

Update: 2025-06-24 10:55 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் முதியோர் இல்லத்தில் இருந்த தந்தை உயிரிழந்த நிலையில் இறுதி சடங்கு வரை கூட காத்திருக்காமல் சென்ற மகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே பிள்ளைகளால் கைவிடப்பட்டு அனாதையாக உயிருக்கு போராடியபடி கிடந்த முதியவரை இரண்டு தினங்களுக்கு முன் சமூக ஆர்வலர்கள் மீட்டு முதியோர் காப்பகத்தில் சேர்த்த நிலையில் முதியவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அவருடைய மகளுக்கு தகவலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் முதியவரை அடக்கம் செய்யவிருந்த இடத்திற்கு வந்த மகள் இறுதி சடங்கு நடப்பதற்கு முன்பே அங்கிருந்து சென்றது ஊர் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்