Coimbatore News || ஆசையாக வாங்கிய ஐஸ் கிரீமில் இறந்து கிடந்த `ஈ' பார்த்ததும் அதிர்ச்சி....

Update: 2025-06-18 04:20 GMT

கோவையில் ஒரு ஐஸ்கிரீம் கடையில் வாங்கிய ஐஸ்கிரீமில் ஈ உறைந்திருந்ததாக, உணவு பாதுகாப்புத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த சிராஜ் என்பவர் இது குறித்து அந்த கடையில் முறையிட்டபோது ஐஸ்கிரீம் நிறுவனத்திற்கு இமெயில் அனுப்பும்படி கூறியதாக தெரிகிறது. அதன்படி இமெயில் அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்பதால்,

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்