Auto accident | கார் மோதியதால் நிலைகுலைந்த ஷேர் ஆட்டோ - சிறுமி உட்பட 10 பேருக்கு நேர்ந்த படுபயங்கரம்

Update: 2025-06-26 04:23 GMT

பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஷேர் ஆட்டோ மீது கார் மோதியதில், சிறுமி உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். காமராஜ் என்பவர் தனது ஷேர் ஆட்டோவில் 5 பயணிகளை ஏற்றிக்கொண்டு, மங்களமேடு நோக்கி சென்றுகொண்டிருந்தார். வல்லாபுரம் பிரிவு சாலை அருகே ஷேர் ஆட்டோ சென்ற போது, பெண்ணாடம் நோக்கி சென்ற கார் பின்புறமாக மோதியது. இதில், ஷேர் ஆட்டோ நசுங்கிய நிலையில், அதில் பயணித்தவர்களும், காரில் வந்த 4 பேரும் என 10 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்