போக்சோ வழக்கு - இளைஞருக்கு 45 ஆண்டுகள் சிறை தண்டனை
ஒரு சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து, மற்றொரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு, 45 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, தேனி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2023 ஆம் ஆண்டு 27 வயது ஹரி கிருஷ்ணராஜ் என்பவர், ஒரு சிறுமியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தும், மற்றொரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இது குறித்த வழக்கை விசாரித்த தேனி போக்சோ நீதிமன்றம், பாதிக்கப்பட்ட ஒரு சிறுமிக்கு 10 லட்ச ரூபாயும், மற்றொரு சிறுமிக்கு 5 லட்ச ரூபாய் என15 லட்ச ரூபாயை நிவாரணம் வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது