இளம்பெண் குறித்து முகநூலில் அவதூறு - இரண்டாவது கணவர் கைது

Update: 2025-05-18 17:09 GMT

இளம்பெண் குறித்து முகநூலில் அவதூறு கருத்துகளை பதிவிட்ட இரண்டாவது கணவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, கொளத்தூர் பகுதியில் வசித்து வரும் 32 வயது பெண்ணின் முதல் கணவர் மரணமடைந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவரை இரண்டாவதாக திருமணம் செய்து வாழ்ந்து வந்ததார். இந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண்ணின் குறித்து ஆபாசமாக பதிவேற்றம் செய்து, அவரது கணவர் அவதூறு பரப்பியுள்ளார் இது தொடர்பாக இளம்பெண் அளித்த புகாரில் இரண்டாவது கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். செல்போன் மற்றும் காரையும் அவரிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்