பெயர் வேறு..போகும் இடம் வேறு.. "அப்படித்தான் இருக்கும்" - தீயாய் பரவும் வீடியோ
சென்னை மாநகர பேருந்தில் அறிவிப்பு பலகை தவறாக உள்ளது என கூறியதற்கு, அப்படித்தான் இருக்கும் என அலட்சியமாக பதில் அளித்த நடத்துனரின் செயல் பயணிகளை முகம் சுளிக்க வைத்தது. தாம்பரம் - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் தடம் எண் 500 பேருந்தில் இந்த குளறுபடி அரங்கேறி உள்ளது. இதனால் குழப்பம் அடைந்த பயணிகள் பேருந்து எங்கே செல்கிறது என தெரியாமல் பரிதவித்தனர்.