"தமிழகத்திற்கு ரூ.4000 கோடி வழங்காதது குறித்து முதல்வர் வலியுறுத்தல்"
மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய 4 ஆயிரம் கோடி ரூபாய் நிதி குறித்து முதலமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் விற்பனை கண்காட்சியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதலமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.