School | Toilet | அரசு பள்ளியில் தடுப்புகளின்றி டாய்லெட்.. அதிகாரிகள் மீது பாய்ந்த Action
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே ஆடுதுறை அரசு பள்ளியில், தடுப்புகளின்றி கழிவறை கட்டப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பேரூராட்சி இளநிலை பொறியாளர் ரமேஷ், செயல் அலுவலர் கமலக்கண்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளி மேம்பாட்டு மானியத்தில், 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கட்டப்பட்ட புதிய இந்த சுகாதார வளாகம் கடந்த 6ம் தேதி மாணவர்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. இதையடுத்து கழிவறை குறுக்கே தடுப்புகள் இன்றி கட்டப்பட்டது சர்ச்சையான நிலையில் பள்ளிக்கல்வித்துறை உத்தரவை தொடர்ந்து கழிவறைகளின் குறுக்கே சிறிய தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டுள்ளன.