School Reopen | நாளை திறக்கப்படும் பள்ளிகள் - கலெக்டர் சொன்ன முக்கிய தகவல்
தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தூத்துக்குடியில் பள்ளிகள் அனைத்தும் தயார்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உள்ள மாநகராட்சி மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி கட்டிடங்களுக்கு வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப்பணியை ஆய்வு செய்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். மேலும், மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள புத்தக்கங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்