திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில், வடக்குவாசல் முன்னறிவிப்பின்றி மூடப்பட்டதால், 3 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். தைப்பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் சிரமமின்றி அம்மனை தரிசனம் செய்வதற்கு, கோயில் நிர்வாகம் சார்பில் வடக்கு வாசல் திறக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில், முன்னறிவிப்பு இன்றி வடக்கு வாசல் கதவு திடீரென மூடப்பட்டதால், வெளியூர்களிலிருந்து வந்திருந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.