அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.42.30 லட்சம் மோசடி - அரசு ஊழியர் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி 42 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த சம்பவத்தில், சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இளநிலை உதவியாளர் செந்தில்நாதன் கைது செய்யப்பட்டு உள்ளார். இவரும், சந்தோஷ் குமார் என்பவரும் சேர்ந்து தர்மபுரி, பென்னாகரம் பகுதியை சேர்ந்த நான்கு பேருக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பணத்தை பெற்று, போலியான பணி ஆணைகளையும் அனுப்பியுள்ளனர். ஏமாந்தவர்கள் அளித்த புகாரின் பேரில், இருவரையும் போலீசார் கைது செய்தனர்.