கொழுந்துவிட்டு எரிந்த ஆம்னி கார்..! - பதறவைக்கும் காட்சிகள்

Update: 2025-03-09 05:14 GMT

சேலம் அருகே ஆம்னி கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியை சேர்ந்தவர் பாரத். இவர் தனது உறவினர்களுடன் ஆம்னி காரில் சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, திடீரென காரின் உள்ளே புகை வந்தது. அதிர்ச்சியான அவர், உறவினர்களுடன் ஆம்னி காரை விட்டு வெளியேறினார். அடுத்த சில வினாடிகளில் ஆம்னி கார் தீப்பிடித்து எரிய துவங்கியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்