"குங்குமம் இந்திய பெண்களின் வீரத்திற்கான அடையாளம்" - பிரதமர் மோடி சூளுரை

Update: 2025-06-01 02:05 GMT

PM Modi | "குங்குமம் இந்திய பெண்களின் வீரத்திற்கான அடையாளம்" - பிரதமர் மோடி சூளுரை

குங்குமம் என்பது இந்திய பெண்களின் வீரத்திற்கான அடையாளம் என்றும், ஒரு தோட்டா இந்தியா மீது சுடப்பட்டால் அதற்கு பீரங்கி குண்டுகள் மூலம் பதிலளிக்கப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். மத்திய பிரதேசம் மாநிலம் போபாலுக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, பயங்கரவாதிகள் இந்தியர்கள் மீதுமட்டுமில்லாமல் பாரம்பரிய கலாச்சாரத்தையும் தாக்கி, நமது சமூகத்தை பிளவுபடுத்த முயன்றுள்ளனர். இந்தியாவின் பெண் சக்திக்கு சவால் விடுத்தனர். ஆனால் ஆபரேஷன் சிந்தூரின் போது, ராணுவம் மட்டுமல்லாது, எல்லைப்பாதுகாப்பு படையிலும் பெண்கள் தங்களின் வீரத்தை காட்டினர். பயங்கரவாதிகளுக்கு உதவ நினைப்பவர்கள் அதற்கான விலையை கொடுக்கவேண்டியிருக்கும். இந்தியா பக்கம் ஒரு தோட்டா சுடப்பட்டால், பீரங்கி குண்டு மூலம் அவர்களுக்கு பதிலடி கிடைக்கும் என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்