அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் போலியாக அடகுகடை நடத்தி 100க்கும் மேற்பட்டோரின் நகைகளை அபேஸ் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தலைமறைவாக இருந்த ராமுவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி உள்ளனர். ராமு அரசு அனுமதி பெறாமல் போலியாக நகை அடகு கடை நடத்தி வந்ததும், இது போல பலரை நம்ப வைத்து நகைகளை மோசடி செய்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.