போலீஸ் எனக்கூறி ஸ்பாவுக்குள் நுழைந்த திருட்டு கும்பல்..அலறிய பெண்கள்.. அடுத்து நடந்த அதிர்ச்சி
நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள தனியார் காம்ப்ளக்ஸில் சேலம் மாவட்டம் மல்லூரைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் கோல்டன் ட்ரீம் ஸ்பா என்ற பெயரில் ஆயுர்வேத சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆயுர்வேத மையத்திற்கு போலீஸ் வந்திருப்பதாக கூறிக்கொண்டு மர்ம நபர்கள் 7 பேர் சென்று உள்ளனர், அப்போது அவர்கள் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என கூறியதையடுத்து அங்கிருந்து பெண் ஊழியர்களிடம் நைசாக பேசி அவர்களை ஒரே அறையில் அடைத்து மிரட்டி அவர்களிடமிருந்து கம்மல், செயின் என ஒன்றரை சவரன் தங்க நகைகள், ரொக்கப்பணம் ரூ.40 ஆயிரத்தையும், சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ள ஹார்டு டிஸ்க் ஆகியவகைகளையும் அந்த மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து ஸ்பா உரிமையாளர் இளங்கோவன் கொடுத்த புகாரின் பேரில் நாமக்கல் போலீசார் ஸ்பா செண்டருக்கு சென்று நகை மற்றும் பணம் திருடிய மர்மநபர்களை தேடிவருகின்றனர்.