சென்னை பெருங்குடி சாலையில் விரிசல் ஏற்பட காரணமான தனியார் நிறுவனம் NOC பெற்று கட்டுமான பணியை தொடர வேண்டுமன மாநகரட்சி உத்தரவிட்டுள்ளது. தரமணி - சதாசிவம் பிரதான சாலையில் தனியார் நிறுவனத்தின் கட்டுமானபணி நடந்து வருகிறது.பேஸ்மென்ட் போடுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டு கனரக இயந்திரங்கள் மூலம் அதனை பலப்படுத்தும் பணி நடைபெற்றது.இந்நிலையில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தின் அருகே,சாலையில் 150 அடி நீளத்திற்கு திடீரென பிளவு ஏற்பட்டது.கட்டுமான பணியின் காரணமாகதான் பிளவு ஏற்பட்டதா என மாநகரட்சி அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில்,கட்டுமான நிறுவனத்தை தொடர்பு கொள்ள முடியாததால் காவல் நிலையத்தில் மாநகராட்சி புகாரளித்தது. மேலும் கட்டுமான பணியினை தொடர மாநகராட்சியிடம் இருந்து NOC பெற வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.