நீலகிரிக்கு மீண்டும் Red Alert - அமலுக்கு வந்த பல்வேறு கட்டுப்பாடுகள்

Update: 2025-05-29 06:30 GMT

Nilgiri || நீலகிரிக்கு மீண்டும் Red Alert - அமலுக்கு வந்த பல்வேறு கட்டுப்பாடுகள்

உதகை - கூடலூர் சாலையில் வாகன போக்குவரத்து கட்டுப்பாடுகள்

நீலகிரி மாவட்டத்திற்கு மீண்டும் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

நடுவட்டம் அருகே மண்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்தார். எனவே, அந்த வழியாக கனரக வாகனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், பகல் நேரங்களில் மட்டும் அரசு பேருந்துகள் அனுமதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துளார்.

மேலும், கனமழை எச்சரிக்கை இருப்பதால் உதகையில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்கள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், ஏற்கனவே பெரும்பாலான சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்