Vellum Penngal | TN Govt | CM Stalin | மகளிர் திட்டங்களால் ஒளிரும் தமிழ்நாடு - அரசு பெருமிதம்

Update: 2025-12-14 00:50 GMT

மகளிர் திட்டங்களால் ஒளிரும் தமிழ்நாடு - அரசு பெருமிதம்

எண்ணற்ற மகளிர் திட்டங்களால் தமிழ்நாடு ஒளிர்வதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் ஒரு கோடியே 14 லட்சம் மகளிர் வங்கிக்கணக்கில் நேரடியாக ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளது.

அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் புதுமைப்பெண் திட்டம், பணிபுரியும் மகளிருக்கு தோழி விடுதிகள், மகளிர் சுய உதவிக்குழுவின் சுமார் இரண்டு ஆயிரத்து 756 கோடி கடன் ரத்து செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ள தமிழக அரசு, மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தியதோடு, உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டதாகவும் பட்டியலிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்