Chennai Fraud | சென்னை ரியல் எஸ்டேட் அதிபருக்கு நேர்ந்த நிலை - மூவரை தூக்கிய போலீஸ்

Update: 2025-12-14 05:24 GMT

ரியல் எஸ்டேட் அதிபரிடம் 40 லட்சம் மோசடி - 3 பேரிடம் விசாரணை. சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபரிடம், 40 லட்சம் ரூபாய் மோசடி செய்த மூன்று நபர்கள் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவர் ரியல் எஸ்டேட், மற்றும் பைனான்ஸ் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவரது நண்பர் மூலம் பழக்கமான லூரூ என்சராஜ் என்பவர், ஆன்லைன் மூலமாக 40 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மூன்று மணி நேரத்தில் 50 லட்சமாக தருவதாக கூறி,வங்கி கணக்கு மூலமாக ஆனந்திடம் பணம் பெற்றார். ஆனால் குறித்த நேரத்தில் பணத்தை தராத நிலையில், தி நகர் பகுதியில் தலைமறைவாக இருந்த லூரூ என்சராஜ், மரியா உள்ளிட்ட மூவரை பிடித்து, ஆனந்த் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்