Asian Le Mans Series கார் பந்தயத்திற்காக மலேசியாவில் நடிகர் அஜித்குமார்

x

Asian Le Mans Series கார் பந்தயத்திற்காக நடிகர் அஜித் குமார் மலேசியா சென்றுள்ள நிலையில் அங்கு எடுக்கப்பட்டுள்ள பல வீடியோக்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது...

குடும்ப குடும்பமாக வந்து நடிகர் அஜித்குமார் உடன் ரசிகர்கள் எடுத்துக் கொள்ளும் புகைப்படம். புகைப்படத்தை எடுத்துக் கொடுக்கும் சிறுத்தை பட இயக்குனர்.கார் ரேஸ் செல்வதற்கு முன்பு நடிகை ஷாலினிக்கு நடிகர் அஜித்குமார் கொடுத்த அன்பு முத்தம்

மலேசியாவில் நடக்கும் Asian Le Mans Series (ALMS) கார் பந்தயத்தில் அஜித் குமார் அணி பங்கேற்று உள்ளது. இந்த நிலையில் ஏராளமான ரசிகர்கள் நடிகர் அஜித குமாருடன் ஆர்வமாக வந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதில் புதிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது அந்த புகைப்படங்களை இயக்குனர் சிறுத்தை சிவா எடுத்துக் கொடுப்பது போல் வீடியோவில் பதிவாகியுள்ளது. மேலும் இந்த மலேசியா கார் பந்தயப் போட்டியில் நடிகர் அஜித்குமாரின் குடும்பமும் அவருக்கு கார் பந்தயத்தை காணுவதற்காக வந்துள்ளனர் அதன் வீடியோவும் வெளியாகி உள்ளது"


Next Story

மேலும் செய்திகள்