நாமக்கல்லில் அதிகாரிகள் திட்டியதாக பெண் தூய்மை பணியாளர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
நாமக்கல் அருகே நல்லிபாளையம் சாவடி தெருவை சேர்ந்தவர் இந்திராணி ( வயது 57), இவர் கடந்த 1997 ம் ஆண்டு முதல் நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் இந்திராணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். உயர்நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் இந்திராணியை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என உத்தரவு பிற்பித்துள்ளது. அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் வடிவேல் இந்திராணிக்கு கடந்த 25.10.25 ம் தேதி கீழ்சாத்தம்பூர் ஊராட்சியில் சிறப்பு காலமுறை ஊதியத்தில் தூய்மைப் பணியாளராக பணி செய்யப்பட்டுள்ளார். அலுவலக உதவியாளராக தனக்கு பணி வழங்கவில்லை ஏன் என மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் வடிவேல் மற்றும் ஊரக வளர்ச்சி மேற்பார்வையாளர் விஜயகுமார் ஆகியோரிடம் இந்திராணி கேட்டபோது இருவரும் தகாத வார்த்தைகளாக பேசியதாக தெரிகிறது . இதில் மனமுடைந்த இந்திராணி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்தபோது பூச்சிக்கொல்லி மருந்து குடித்து விட்டு வீடியோ ஒன்று வெளியிட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.
