ராஜினாமா செய்ய தயார் - செல்வப்பெருந்தகை சவால்
காங்கிரஸ் ஆட்சியில் நீட் தேர்வு சட்டம் கொண்டுவரப்படவில்லை என்றும் அப்படி சட்டம் கொண்டுவரப்பட்டது என்று நிரூபித்தால் தாம் பதவியை ராஜினாமா செய்ய தயார் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். மேலும், ஹிந்தி படங்களை பார்த்து தமிழகத்தில் கொள்ளை சம்பவத்தில் சிலர் ஈடுபடுவதாகவும், அவர்களை ஆங்கில படங்களை பார்த்து ஜேம்ஸ்பாண்ட் மாதிரி காவல்துறையினர் பிடிப்பதாகவும் கூறிய செல்வப் பெருந்தகை, இதன் மூலம் ஹிந்தியை விட ஆங்கில பெருசு என்று தெரிகிறதா? என்றும் பேசினார்.