நாட்டிலேயே முதல் முறையாக இருதயத்தின் இடது கீழறையில் இருந்து அரிய வகை கட்டியை நுண்துளை சிகிச்சை மூலம் அகற்றி சென்னை சிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
45 வயதான பெண்ணின் இருதயத்தில் ரத்தத்தை உந்தி தள்ளும் பிரதான அறையின் உட்புறத்தில் வளர்ந்திருந்த அரிதான கட்டியை நவீன எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை மூலம் இருதய சிகிச்சை நிபுணர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.