"நாளை முதல் படகுகளில் கருப்பு கொடி கட்டி வேலை நிறுத்தம்.."ராமேஸ்வரத்தில் வெடித்த போராட்டம்

Update: 2024-02-17 12:24 GMT

இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் படகின் ஓட்டுநர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்குவதை கண்டித்தும், 2வது முறையாக எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்குவதை கண்டித்தும் ஏராளமான மீனவர்கள் உணர்ச்சிப்பூர்வமாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் பலர் கதறியழுதனர்... ராமேஸ்வரம் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தின் முன்பாக இப்போராட்டம் நடைபெற்றது. கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க போவதாகவும், வரும் 20ம் தேதி மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் இருந்து பேரணியாக சென்று ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடவும் மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர். நாளை முதல் தங்களுடைய படகுகளில் கருப்பு கொடி கட்டி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் மீனவர்கள் ஈடுபட உள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்