குளித்தலை அருகே நடைபெற்ற எல்கை பந்தயப் போட்டியில், காளைகளும், குதிரைகளும் சீறிப் பாய்ந்தது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கோட்டைமேடு பகுதியில், மாடுகளுக்காக சிறிய மாடு, ஒற்றை மாடு, இரட்டை மாடு, குதிரைகளுக்காக சிறிய குதிரை, பெரிய குதிரை, சைக்கிள் ரேஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் திருச்சி, கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட காளைகளும், குதிரைகளும் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற குதிரைகள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.