சடசடன்னு அடிக்கப்போகும் மழை... சூறாவளி காற்று - சென்னைக்கு வாய்ப்பிருக்கா..?

Update: 2024-01-12 10:41 GMT

இந்நிலையில், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்... குமரிக்கடல், அதை ஒட்டிய மன்னார் வளைகுடா, மாலத்தீவு, அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், தென்மேற்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்