சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் புதிய மாற்றம்..! தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு!
செங்கோட்டை - தாம்பரம் சிலம்பு எக்ஸ்பிரஸ் மற்றும் தாம்பரம் - நாகர்கோவில் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் மார்ச் 1 முதல் 3 வாரங்களுக்கு, ஒரு இரண்டாம் வகுப்பு பொது பெட்டி, இரண்டு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி மற்றும் இரண்டு குளிர்சாதன மூன்றடுக்கு பெட்டி உட்பட 6 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படவுள்ளன.