விசிக வழக்கறிஞர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் - வேங்கைவயலில் பரபரப்பு
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்திக்க சென்ற விசிகவின் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பார்வேந்தன் உள்ளிட்ட சில வழக்கறிஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கிராமத்தின் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் இருந்த போலீசார், வழக்கறிஞர்களை ஊருக்குள் செல்ல விடாமல் தடுத்ததால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.