கோவிலை இடிக்க எதிர்ப்பு - போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

Update: 2025-04-11 12:23 GMT

விழுப்புரம் அருகே சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட அம்மன் கோயிலை இடிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதையொட்டி கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் அங்கு பாதுகாப்பிற்காக  குவிக்கப்பட்டுள்ளனர். இச்சூழலில் கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்