பிராங்க் செய்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் சக மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- கோவையில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் படித்து வந்த திருப்பூர் ராக்கியாபாளையத்தை சேர்ந்த சத்யநாராயணன் என்ற மாணவரை சக மாணவர்கள் பிராங்க் செய்து தாக்கியுள்ளனர்.
- இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சத்யநாராயணன் கல்லூரி செல்லாமல் இருந்துள்ளார். மேலும் இது குறித்து கல்லூரி ஆசிரியருக்கு ஆடியோ மெசேஜ் அனுப்பிவிட்டு ஜனவரி 3 ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இதனைத் தொடர்ந்து பிராங்க் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்களை கல்லூரி நிர்வாகம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்தது.
- இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் புகார் அளிந்திருந்த நிலையில், சத்யநாராயணனுடன் படித்து வந்த சூர்யபிரகாஷ் மற்றும் ஜீவா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.