"பொங்கலுக்கு கரும்பு கொள்முதல் - ரூ.40 கோடி அளவுக்கு மோசடி" - கலெக்டரிடம் புகார்
"பொங்கலுக்கு கரும்பு கொள்முதல் - ரூ.40 கோடி அளவுக்கு மோசடி" - கலெக்டரிடம் புகார்
பொங்கல் பரிசு தொகுப்பிற்கு கரும்பு கொள்முதல் செய்யப்பட்டதில் 40 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். மோசடி குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளிக்கப்பட்ட நிலையில், விவசாயிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். அப்போது பேசிய விவசாயிகள், 2 கோடி கரும்புக்கு பதிலாக இரண்டாயிரத்து 300 லோடு கரும்பு மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டதாக தெரிவித்தனர். மேலும், ஒவ்வொரு கரும்புக்கும் விவசாயிகளுக்கு 15 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், சுமார் 20 ரூபாயை அதிகாரிகளும், இடைத்தரகர்களும் எடுத்துக்கொண்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.