``ஓடிட்டேன்ல.. வர்ட்டா மாமே.. டுர்ர்ர்...’’போலீஸுக்கே அல்வா கொடுத்த வில்லங்க வாலிபர்..
கிருஷ்ணகிரியில் ஹெல்மெட் அணியாமல், மது போதையில் செல்போன் பேசியபடி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர், போக்குவரத்து காவலரிடம் இருந்து தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த இளைஞரை, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் குமார், நிறுத்தி விசாரித்தபோது, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர் அதே வாகனத்தில் காவல் நிலையத்திற்கு தன்னை அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளார். அந்த இளைஞர், வாகனத்தில் சிறிது தூரம் அழைத்துச் சென்று விட்டு பாதி வழியில் காவல் உதவி ஆய்வாளரை இறக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.