சென்னையில் பேராசை காட்டி மோசடியில் ஈடுபட்ட சகோதரன், சகோதரியை தட்டி தூக்கிய போலீசார்

Update: 2025-04-24 08:51 GMT

சென்னையில் தீபாவளி சீட்டு நிறுவனம் நடத்தி, ரூபாய் 66 லட்சத்து 90 ஆயிரம் மோசடி செய்த சகோதரன் மற்றும் சகோதரியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை வியாசர்பாடி அருகே ஆர்.எஸ். எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் கோகுல்நாத் என்பவர் தீபாவளி பண்டு நடத்தி, மாதம் ரூ.1000 வீதம் 12 மாதங்கள் கட்டினால் ரூ.15,000 தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி ஜெயக்குமார் என்பவர் தனது உறவினர்களிடம் பணம் பெற்று மொத்தம் 66 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை அந்த நிறுவனத்தில் கட்டியுள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட கோகுல்நாத் அதனை திரும்பத் தராமல் மோசடி செய்துள்ளார். இது குறித்து ஜெயக்குமார் போலீசில் புகாரளித்த நிலையில், புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கோகுல்நாத் மற்றும் அவரது சகோதரி சௌமியாவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்