அனகாபுத்தூரில் குவிந்த போலீசார்... போராடிய மக்கள் -கண்ணீர் விட்டு கதறிய காட்சி

Update: 2025-05-21 16:19 GMT

அனகாபுத்தூரில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய பொதுமக்களை, குண்டு கட்டாக போலீசார் அப்புறப்படுத்தினர். 60 ஆண்டுகளாக அங்கு தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த குடும்ப பெண்கள், தங்கள் வீடு விட்டு வெளியேறுவதை எண்ணி கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி காண்போரை கலங்க செய்தது. அப்போது அங்கு கூடியிருந்த இளைஞர்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போது, தவறுதலாக வாய் பேச முடியாத காது கேளாத மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவரை அழைத்துச் சென்றதால் பொதுமக்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஏற்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்