PM அலுவலகத்துக்கே பறந்த புகார்..! போலீசார் நோட்டீஸ்! சிக்கலில் TTF முடியல... கிளம்பிய புது பூதம்

Update: 2024-05-22 13:50 GMT

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது பிரதமர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டிருக்கிறது. டிடிஎஃப் வாசன் டூ பிரதமர் அலுவலகம்.... நடந்தது என்ன ? பார்க்கலாம் விரிவாக....

முன்னமாதிரி கிடையாது சார் நான் என, சர்ச்சைகளுக்கு விடுப்பளித்து.... தான் உண்டு தன் வேலையுண்டு என வாழ்ந்து வருகிறார் யூடியூபர் டிடிஎஃப் வாசன்...

ஒரு காலத்தில்... அனுமதியின்றி தன் ரசிகர்களை கூட்டம் கூட்டியது, பைக்கில் அதிவேகமாக சென்று அபராதம் பெற்றது, பைக் சாகசத்தில் ஈடுபட்டு கைதானது என பெரும் சர்ச்சைகளுக்கு பெயர் போயிருந்தார் வாசன்....

கடந்தாண்டு... காஞ்சிபுரம் அருகே பைக்கை வீலிங் செய்து சாகசத்தில் ஈடுபட்ட டிடிஎஃப் வாசன், கீழே விழுந்து கை எலும்பை முறித்துக் கொண்டதும், பின்னர் இந்த சம்பவத்தால் கைதாகி சிறை சென்றதையும் எளிதில் மறந்து விட முடியாது....

பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு டிடிஎஃப் வாசன் ஜாமின் மூலம் சிறையிலிருந்து வெளியே வந்த வந்த நிலையில், அவரின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து கஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் இட்ட கடிவாளம் டிடிஎஃப் பேன்ஸ்களின் நெஞ்சை புண்னாக்கக்கூடிய ஒன்று...

இந்நிலையில்தான், டிடிஎஃப் வாசன் மீது பிரதமர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது... இதனால், மீண்டும் அவர் குறித்தான சர்ச்சை தகிக்க ஆரம்பித்திருக்கிறது...

இரு சக்கர வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை சென்னை அயப்பாக்கத்தில் நடத்தி வருகிறார் டிடிஎஃப் வாசன்...

டிடிஎஃப் வாசனின் இந்த கடையில், அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலென்சர்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளதாகவும் கூறி பிரதமர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது...

இந்நிலையில், இது குறித்து விசாரிக்க ஆவடி காவல் ஆணையரகம் உத்தரவிட்ட நிலையில், அம்பத்தூர் போக்குவரத்து காவல்துறையினர் டிடிஎஃப் வாசனின் கடைக்கு சென்று ஆய்வு செய்தனர்...

தொடர்ந்து, கடைக்கான உரிமங்களுடன் விசாரணைக்கு ஆஜராகக் கோரி டிடிஎஃப் வாசனுக்கு போலீசார் உத்தரவும் பிறப்பித்திருப்பது டிடிஎஃப் பேன்ஸ்களுக்கிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

போலீசாரின் இந்த சோதனையின் போது, டிடிஎஃப் வாசனின் கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக அவர்களிடம் புகாரளிக்கப்பட்டதை அடுத்து, டிடிஎஃப் வாசனுக்கு போலீசார் நோட்டீஸூம் அனுப்பிச் சென்றிருக்கின்றனர்...

இதன் மூலம் சர்ச்சை வளையத்துக்குள் மீண்டும் டிடிஎஃப் வாசனின் பெயர் அடிபட ஆரம்பித்திருக்கும் நிலையில், இதனை வாசன் எப்படி எதிர்கொள்ள போகிறார் என்பதை பொறுத்திருந்தே பார்க்க முடியும்..

Tags:    

மேலும் செய்திகள்