``ப்ளீஸ் சார்''.. கைகூப்பி கண்ணீர்மல்க ராணுவ வீரர் வெளியிட்ட வீடியோ

Update: 2025-05-14 03:22 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர், சொத்து பிரச்சினையில் தனது மனைவி மற்றும் தாயை உறவினர்கள் தாக்கியதாக கூறி, கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூட்டானில் எல்லை பாதுகாப்பு பணியில் இருக்கும் முரளி ஜெகன், தனது கிராமத்தில் நடந்த தாக்குதல் குறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்