"என் காதலியோடு சேர என்னை பாஸ் போடுங்க"- Answer sheet-ல் ரூ.500 வைத்த 10 வகுப்பு மாணவன்

Update: 2025-04-21 10:31 GMT

கர்நாடகாவில், எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாளுடன் 500 ரூபாயை இணைத்து மாணவர் நூதன வேண்டுகோள் விடுத்த புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெலகாவியில் உள்ள அரசுப்பள்ளியில் விடைத்தாள்களை ஆசிரியர்கள் மதிப்பீடு செய்தனர். அப்போது, மாணவர் ஒருவரின் விடைத்தாளில் 500 ரூபாய் நோட்டை ஒட்டியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில், தனது காதல் கைகூட ஏதாவது செய்து தன்னை தேர்ச்சி பெறச் செய்யுமாறும், தான் வைத்துள்ள 500 ரூபாயை தேநீருக்கு பயன்படுத்திக்கொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்