கவரிங் செயினை வங்கியில் அடகு வைக்க வந்த நபர் கைது
ஶ்ரீபெரும்புதூர் அடுத்த மணிமங்கலம் SBIவங்கியில் கவரிங் செயினை தங்கம் என கூறி அடகு வைக்க வந்தவரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அடுத்த மணிமங்கலம் பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி இயங்கி வருகிறது. சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவர் மணிமங்கலம் எஸ் பி ஐ வங்கியில் சுமார் ஒரு சவரன் எடையுள்ள கவரிங் செயினை தங்கம் என கூறி அடகு வைக்குமாறு வங்கி அலுவலரிடம் கொடுத்துள்ளார். அதனை பெற்றுக்கொண்ட வங்கி அலுவலர் பரிசோதனை செய்ததில் கவரிங் செயின் என தெரியவந்துள்ளது. உடனே வங்கி மேலாளர் மணிமங்கலம் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் கவரிங் செயினை வைத்து மோசடியில் ஈடுபட முயன்ற உதயகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.