தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக் கொள்கை மட்டுமே கடைபிடிக்கப்படும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் முன்மொழிக் கொள்கை என்பது இல்லாத நிலையில், தமிழகத்தில் அமல்படுத்த வலியுறுத்துவது கண்டிக்கத்தக்கது எனக்கூறினார். மேலும், மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால் மட்டுமே நிதி விடுவிக்கப்படும் என்பது சர்வாதிகாரத்தின் உச்சம் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.