"இது உன் அப்பன் வீட்டு பணமா?"..லெப்ட் ரைட் விட்ட பெண் கலெக்டர்..வாய் பேச முடியாமல் நின்ற அதிகாரி

Update: 2024-11-21 03:50 GMT

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் இரவில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கடுமையாக கண்டித்தார். தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள இருளப்பட்டி பகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் சாந்தி இரவு நேரத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பஞ்சாயத்து நிர்வாகத்தின் மூலம் வீடு வழங்கும் திட்டத்தில் பல்வேறு குறைகளை கூறிய பொதுமக்கள், இதுவரை ஊராட்சி மன்ற செயலாளர் தங்கள் பகுதிக்கு வந்ததே இல்லை என குற்றம் சாட்டினர். இதனால், கோபமடைந்த ஆட்சியர், இது உன் அப்பன் வீட்டு பணமா என கேள்வி எழுப்பினார். உடனடியாக பொதுமக்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிந்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்