சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, 63 நாயன்மார்களின் ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது. நான்கு மாட வீதிகள் மற்றும் தெப்பக்குளம் சாலை வழியாக இந்த ஊர்வலம் நடைபெற்றது. இதில் சென்னையில் உள்ள முக்கிய ஆலயங்களிலிருந்து உற்சவ மூர்த்திகள் எழுந்தருளினர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.