நெல் நடவு பணி - கூமாபட்டி வந்த வட மாநிலத்தவர்கள்
கொல்கத்தாவில் இருந்து கூமாபட்டிக்கு வருகை தந்த நூற்றுக்கணக்கான வடமாநிலத்தினர் நெல் நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள வத்திராயிருப்பு , கான்சாபுரம், தம்பிபட்டி, கோட்டையூர் மற்றும் மகாராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரதானமாக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் நடவு பணிக்கு போதுமான விவசாயிகள் கிடைக்காததால், குறைந்த ஊதியத்தில் வட மாநிலத்தவரை வைத்து நெல் நடவு பணிகளை மேற்கொண்டு வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.