கொளத்தூர் ராஜமங்கலம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், செக்யூரிட்டி ஏஜென்சி நடத்தி வந்தார்.
வெளிநாட்டு புராஜெக்ட் வாங்கித் தருவதாக கூறி, சகோதரியின் கணவர் ராஜேஷ்கண்ணா மற்றும் சரவணன் ராமசாமி ஆகியோர் 60 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கடும் மனவேதனையில் இருந்த ஜெயக்குமார், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஜெயக்குமாரின் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.